திமுக அரசு இந்து விரோத மனப்பான்மை கொண்டது - பியூஷ் கோயல் குற்றசாட்டு!!

By : G Pradeep
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது, அதன் இந்து விரோத மனப்பான்மையை பிரதிபலிப்பதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்.
"திமுக அரசின் இந்து விரோத மனப்பான்மை தெளிவாகத் தெரிகிறது. உண்மையில் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், திமுக, இண்டியா கூட்டணி ஆகியோரின் வெறுப்புணர்வையே இது காட்டுகிறது" என பியூஷ் கோயல் குற்றம் சாட்டினார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மிகவும் பழமையானது. பல நூற்றாண்டுகளாக முருகப் பெருமானை வணங்கி தீபங்கள் ஏற்றப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக அரசு இந்த மரபுகளைக் கடைப்பிடிக்க அனுமதிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, தீபம் ஏற்ற அனுமதி அளித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறை இதற்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
