திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் திமுக அரசின் இந்து விரோத மனப்பான்மை!! கிளம்பிய புதிய சர்ச்சை!!

By : G Pradeep
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரைக்கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் விடாது என்று கூறிய நீதிபதிகள், அரசியல் காரணங்களுக்காக அரசு தரம் தாழ்ந்து செயல்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை புறந்தள்ளிய திமுக அரசு, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையானது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
அமைச்சர் ரகுபதியின் பேச்சுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். "திமுக அரசின் இந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
