திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்குகில் புதிய திருப்பம்!!

By : G Pradeep
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு முறையாக பதில் அளிக்காவிட்டால் பிப்.2-ல் அவமதிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார். அடுத்த விசாரணை வரும் பிப்.2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுத்தவர்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை என நீதிபதி கூறியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர், துணை காவல் ஆணையர் தரப்பில், ‘நாங்கள் சுயமாக முடிவெடுத்து செயல்பட்டோம். எங்களை யாரும் நிர்பந்திக்கவோ, அறிவுறுத்தவோ இல்லை’ எனக் கூறப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை அவமதித்தவர்கள் வருத்தம் தெரிவித்தோ, விளக்கம் அளித்தோ இதுவரை மனு தாக்கல் செய்யவில்லை என நீதிபதி கூறினார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என 1.12.2025-ல் பிறப்பித்த உத்தரவை உத்தரவை கோயில் அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.
