Begin typing your search above and press return to search.
வேலூர் மாவட்டத்தில் குட்கா விற்பனைக்கு அதிரடி நடவடிக்கை!!

By : G Pradeep
வேலூர் மாவட்டக் காவல்துறை போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது. 2025 ஜனவரி 1-ம் தேதி தொடங்கி, 2026 ஜனவரி 12-ம் தேதி வரை சட்டவிரோதமாக குட்கா விற்பனைச் செய்யப்பட்டது தொடர்பாக மட்டுமே மாவட்டத்தில் 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 217 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 4,654 கி குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த 8,67,857 ரூபாய்க்கான பரிவர்த்தனையும் முடக்கப்பட்டிருக்கிறது. 12 கார்கள் மற்றும் 30 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற போதைப்பொருள் தொடர்புடைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்டக் காவல்துறையினர் எச்சரித்துள்ளது.
Next Story
