சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் தொடரும் விசாரணை!!

By : G Pradeep
கடந்த 1998-ம் ஆண்டு சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை துவார பாலகர்கள் உள்ளிட்ட சிற்பங்களில் தங்கத் தகடு பதிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா சுமார் 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தார்.
2019-ம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் துவார பாலகர்கள் சிலையில் உள்ள செம்புத் தகடுகள் மீது தங்கம் பதிக்கும் திருப்பணிக்கு உபயம் வழங்கியதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது. அந்த தங்க கவசங்களில் சுமார் 4 கிலோ எடை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம்) அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமார், முன்னாள் உறுப்பினர்கள் விஜயகுமார், கே.பி.சங்கரதாஸ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் கடந்த 2019-ம் ஆண்டு தேவசம்போர்டு கூட்டத்தில் தங்கம் பூசிய தகடு என குறிப்பிடப்பட்டதை பச்சை இங்க் பேனாவால் வெட்டி செம்புத்தகடு என திருத்தியுள்ளனர்.
