Begin typing your search above and press return to search.
புதிய சகாப்தத்தை தொடங்கிய வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்!!

By : G Pradeep
பிரதமர் மோடி மேற்கு வங்கத்தின் மால்டா டவுன் நிலையத்தில் இருந்து ஹவுரா மற்றும் கவுஹாத்தி இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் பயணிகளுக்கு சிக்கனமான கட்டணத்தில் விமானப் பயணம் போன்ற பயண அனுபவத்தை வழங்கும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவுரா – கவுஹாத்தி வழித்தடத்தில் பயண நேரத்தை சுமார் 2.5 மணி நேரம் கணிசமாகக் குறைப்பதன் மூலம் மதப் பயணம் மற்றும் சுற்றுலாவுக்கும் ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களை நாட்டுக்கு ரூ. 3,250 கோடி மதிப்புள்ள பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.
Next Story
