சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!! பிரம்மோஸ் ஏவுகணை சிறப்பு!!

By : G Pradeep
சென்னை பல்கலைக்கழகத்தின் 167-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து, பட்டங்களை வழங்கினார். 1,93,686 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
பிரம்மோஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சிவதாணுபிள்ளை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். "ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பிரம்மோஸ் ஏவுகணையின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டது. அந்த தொழில்நுட்பம், எதிரிகளை மண்டியிட வைத்தது" என்றார்.
2047-ல் இந்தியா வளர்ச்சி அடைந்த பாரதமாக மாற வேண்டும் என்றும், வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலைகளை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் விழாவை புறக்கணித்தார். ஆளுநர் ஆர்.என். ரவி தமிழுக்கும், தமிழினத்துக்கும் எதிரான செயல்களில் ஈடுபடுவதாக கூறி புறக்கணிப்பை நியாயப்படுத்தினார்.
