குவாரிகளுக்கு எதிர்ப்பு!! மதுரையில் ஆட்சியர் காரை முற்றுகை!!

By : Bharathi Latha
மதுரை மாவட்டம் கல்லணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் காரை மறைத்தானர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கல்லணை, அச்சங்குளம் சுற்றுவட்டாரங்களில் முறைகேடாக செயல்பட்டு வரும் கல்குவாரிகளை ஆய்வு செய்யுமாறு மக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த நிலையில், வீட்டுக்கு காரில் புறப்பட்ட ஆட்சியர் வாகனத்தை மறைத்து முற்றுகையிட்டனர்.
காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார் வந்து அங்கிருந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 5 பேரை மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
இதன் பிறகு அங்கிருந்தவர்களிடம் மேலும் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் கூட்டம் கலைந்தது.
