Kathir News
Begin typing your search above and press return to search.

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தனி அமைப்பு!!உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தனி அமைப்பு!!உயர்நீதிமன்றம் உத்தரவு!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Feb 2026 3:13 PM IST

சென்னை உயர்நீதிமன்றம், கிறிஸ்தவ தேவாலயங்களின் சொத்துக்களை நிர்வகிக்க தனி அமைப்பை உருவாக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அறநிலையத் துறை, வக்பு வாரியம் போல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தனி அமைப்பு வேண்டும் என சிஎஸ்ஐ தூத்துக்குடி நாசரேத் மறைமாவட்ட தேர்தல் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் உத்தரவு கூறினர்.


தேவாலயங்களின் பெயரில் ஏராளமான சொத்துக்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருவதால், தேர்தலில் போட்டி கடுமையாக உள்ளது.


இதைத்தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலய சொத்துக்களை பாதுகாப்பது அவசியம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்து கோயில்களை நிர்வகிக்க அறநிலையத் துறை, இஸ்லாமியர் சொத்துக்களை முறைப்படுத்த வக்பு வாரியம் இருப்பதைப் போல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தனி அமைப்பு வேண்டும் என கூறினர்.


மத்திய உள்துறை அமைச்சக செயலர், தமிழக தலைமை செயலர் ஆகியோர் கிறிஸ்தவ தேவாலய சொத்துக்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளை சட்டப்பூர்வமாக நிர்வகிக்க அமைப்பை உருவாக்குவது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News