Kathir News
Begin typing your search above and press return to search.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!! காவல்துறை நடவடிக்கை கண்டனம்!!

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!! காவல்துறை நடவடிக்கை கண்டனம்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Feb 2026 7:55 PM IST

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் 5 நாட்களாக போராடி வருகின்றனர். தங்களுக்கான மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், நேற்று நள்ளிரவில் காவல்துறை இரக்கமற்ற முறையில் அவர்களை அப்புறப்படுத்தியுள்ளது.


மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி ஜான்சி ராணி கூறுகையில், "மாலைக்கு மேல் எங்களை கலைந்து போக சொன்னார்கள். ஆனால், நாங்கள் போராட்டத்தை தொடர விரும்பினோம்" என்கிறார். காவல்துறையினர் உணவும் தண்ணீரும் கொடுக்கவில்லை.


இரவு 11:30 மணியளவில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் வந்த பிறகு, மாற்றுத்திறனாளிகளை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் தங்க வைக்க காவல்துறை ஒப்புக்கொண்டது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் இதை ஏற்கவில்லை. காவல்துறையினர் மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News