Begin typing your search above and press return to search.
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி! உறுப்பு தானம், ஏஐ உச்சி மாநாடு மற்றும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்!!

By : Bharathi Latha
பிரதமர் மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் உறுப்பு தானம் செய்த குடும்பங்களை பாராட்டியுள்ளார், குறிப்பாக கேரளாவின் ஆலின் குடும்பத்தை கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சிஇஓக்கள், ஏஐ நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏஐ தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
ராஜாஜி சிலை திறப்பு விழா குறித்தும் பேசியுள்ளார். ஜெயலலிதா பிறந்தநாள் குறித்தும் அவரை மக்கள் போற்றும் மகத்தான தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. மாணவர்களே, உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். படித்ததை முழு மனதோடு எழுதுங்கள். படிப்பிலும், வாழ்விலும் நீங்கள் புதிய சிகரங்களைத் தொட வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
Next Story
