கோயில் திருவிழாக்களில் சிறு வியாபாரிகளுக்கு அனுமதி!! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!

By : Bharathi Latha
சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கோயில் திருவிழாக்களில் சிறு வியாபாரிகளையும், உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்யவும் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா வரும் மார்ச் 11-ம் தேதி முதல் மார்ச் 13-ம் தேதி வரை நடைப்பெற உள்ளது.
இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு முறையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், தற்காலிக கடைகளை முறைப்படுத்த கோரியும் சேலத்தை சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதி பரதசக்ரவர்த்தி, கோயில் திருவிழா என்பது சடங்கு மட்டுமல்ல, அது ஒரு கலாச்சார நிகழ்வு என கருத்து தெரிவித்தார். சிறு வியாபாரிகள் நம் நாட்டின் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார்.
கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பதை அறிந்து அவ்வாறு இருந்தால் அந்நிலங்களை மீட்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
