Begin typing your search above and press return to search.
பூங்குடி தொடக்கப் பள்ளி!! கழிவறை இல்லாமல் மாணவர்கள் அவதி!!

By : Bharathi Latha
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள பூங்குடி கிராமத்தில் 1952-ல் தொடங்கப்பட்ட தொடக்கப் பள்ளியில் 34 மாணவர்கள் படித்து வரும் நிலையில் பள்ளியில் ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனி கழிவறைகள் இல்லை.
அதன் பிறகு ஆண்களுக்கு தனிக் கழிவறை அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டாலும், இன்று வரை புதிய கழிவறை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாக்சன், அங்கு கழிவறை கட்டி முடித்து இருப்பார்கள் என்று நினைத்தேன் என தெரிவித்துள்ளார். உதவிப் பொறியாளர் பூவராகவன், டெண்டர் விடப்பட்ட நிலையில், அடுத்த வாரத்தில் கழிவறை கட்டும் பணியானது தொடங்கும் எனக் கூறியுள்ளார்.
Next Story
