Kathir News
Begin typing your search above and press return to search.

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு! அமைச்சர் கே.என் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு!

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு! அமைச்சர் கே.என் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 March 2026 4:32 PM IST

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டும், வழக்குப் பதிவு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களில் ஆதாரங்கள் உள்ளதாகவும், உடனடியாக வழக்குப்பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.


இருப்பினும் வழக்குப் பதிவு செய்யாமல் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கு தலைமை நீதிபதி விசாரணை செய்த போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், வழக்குப் பதிவு செய்யக்கோரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார். இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News