Kathir News
Begin typing your search above and press return to search.

அதிகாரிகள் அரசு சொத்துகளை பாதுகாக்க அக்கறை காட்ட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு!!

அதிகாரிகள் அரசு சொத்துகளை பாதுகாக்க அக்கறை காட்ட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 March 2026 4:47 PM IST

உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில், அதிகாரிகள் அரசு சொத்துகளை பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை என கூறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேது மாதவன், வேல்முருகன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 2001-ல் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரப்பட்டது.


நீதிபதி செந்தில்குமார் இந்த வழக்கில் ஒருதலைப்பட்சமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அரசு தரப்பு மேல்முறையீடு செய்யவில்லை என கூறினார். அதிகாரிகள் அரசு சொத்துகளை பாதுகாக்க அக்கறை காட்ட வேண்டும் எனவும் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மீது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும், அரசு நிலங்களை பாதுகாப்பது, வழக்கை சந்திப்பது போன்ற விவகாரங்களில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News