Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு!! செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா கூடுதல் மனு!!

விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு!! செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா கூடுதல் மனு!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 March 2026 12:25 PM IST

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், தனது கணவர் விஜய் தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிப்பதாகவும், விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரையில் உள்ள தனது கணவர் வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


விவாகரத்துக்கான காரணமாக, தங்கள் குடும்ப வாழ்க்கையில் ஒரு நடிகையின் குறுக்கீடு காரணமாக விவாகரத்து வரை சென்று விட்டதாக சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.


சங்கீதா, தனக்கு விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரையில் உள்ள கணவர் வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான வசிப்பிடத்தை ஏற்பாடு செய்து கொடுக்க விஜய்க்கு இடைக்காலமாக உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.


இந்த வழக்கு ஏப்.20-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News