Kathir News
Begin typing your search above and press return to search.

கரூர் துயரச் சம்பவம்!! சிபிஐ விசாரணை - செந்தில் பாலாஜி பதில்!!

கரூர் துயரச் சம்பவம்!! சிபிஐ விசாரணை - செந்தில் பாலாஜி பதில்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 March 2026 7:14 PM IST

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால், மார்ச் 17ம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கங்களை அளிக்க போவதாக தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு செப்.27ம் தேதி கரூர் மாவட்டத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து தவெக தலைவர் விஜய், தவெக நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஐ.ஜி, எஸ்.பி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.


செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. செந்தில் பாலாஜி, தனது சமூக வலைத்தள பக்கத்தில், மார்ச் 17ம் தேதி நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சிபிஐ அனுப்பிய சம்மன் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News