Kathir News
Begin typing your search above and press return to search.

பஞ்சாப் தேர்தலில் அமித் ஷா உறுதி!!

பஞ்சாப் தேர்தலில் அமித் ஷா உறுதி!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 March 2026 9:04 PM IST

அமித் ஷா பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பேசினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார்.


பஞ்சாபில் பாஜக துணை சக்தியாக இருந்த காலம் முடிந்துவிட்ட நிலையில், தனித்து களம் காணும் எனவும் அமித் ஷா தெரிவித்தார்.


காங்கிரஸ், அகாலி தளம், ஆம் ஆத்மி கட்சிகளை மக்கள் சோதித்துப் பார்த்துவிட்டதாகவும், இப்போது பாஜகவுக்கு வாய்ப்பு அளிக்கும்படியும் கூறினார்.


போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதிலும், கடன் சுமையில் இருந்து பஞ்சாபை மீட்பதிலும் உறுதியாக செயல்படுவோம் என அமித் ஷா உறுதி அளித்தார்.


நக்ஸல் தீவிரவாதத்துக்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புச் சட்டம் 370 ரத்து விஷயத்திலும் எப்படி உறுதியான நடவடிக்கைகளை எடுத்தோமோ அதைப்போல போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதிலும் உறுதியாக செயல்படுவோம் என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News