Kathir News
Begin typing your search above and press return to search.

வேலூர் மேயர் சுஜாதா தேர்தல் விதி மீறல்!! போலீஸ் வழக்கு!!

வேலூர் மேயர் சுஜாதா தேர்தல் விதி மீறல்!! போலீஸ் வழக்கு!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 March 2026 3:33 PM IST

வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா தேர்தல் நடத்தை விதிகளை மீறி விளையாட்டு உபகரணங்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.


மேயர் சுஜாதா தனது காரில் வெளியேறும் போது, தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினர் காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மேயரின் ஓட்டுநர் காரை வேகமாக இயக்கிச் சென்றுள்ளார்.


இதுபற்றி, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அ.தி.மு.க வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு புகாராக பதிவு செய்தார். புகாரின் அடிப்படையில், மேயரின் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


மேயர் சுஜாதாவின் காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அடுத்தகட்டமாக, மேயர் சுஜாதாவின் பெயரையும் வழக்கில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News