Kathir News
Begin typing your search above and press return to search.

தூத்துக்குடி மாணவி கொலை!! குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

தூத்துக்குடி மாணவி கொலை!! குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 March 2026 5:50 PM IST

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தை சேர்த்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், போலீஸார் 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடினர். பின் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரனை போலீஸார் கைது செய்தனர்.


இதைதொடர்ந்து குற்றவாளி கூறிய வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2020-ம் ஆண்டு பருத்திக் காட்டில் பருத்தி பறித்துக் கொண்டிருந்த 65 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நிலையில், வழக்கை நடத்த பணம் தேவைப்பட்டதால் மீண்டும் பெண்களிடம் நகைகளை பறிக்க முடிவு செய்துள்ளார்.


பெண்கள் தனியாக சிக்கினால் முதலில் கட்டையால் தலையில் ஓங்கி அடித்து மயக்கமடையச் செய்தபிறகு நகைகளை திருடுவதும், பின்னர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதே பாணியில்தான் பள்ளி மாணவியையும் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News