Begin typing your search above and press return to search.
எரிவாயு பற்றாக்குறைக்கு மத்திய அரசு நிவாரணம்!!

By : Bharathi Latha
எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026 மார்ச் 23 முதல், மாநிலங்களுக்கு வழங்கப்படும் வர்த்தக எல்பிஜி விநியோகம் 20% அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விநியோகம் முன் நிலையின் 50% வரை உயரும்.
சில முக்கிய துறைகளுக்கு இந்த கூடுதல் எரிவாயுவானது முதலில் வழங்கப்படும். பொதுமக்களுக்கு உணவு வழங்கும் உணவகங்கள், சாலை ஓர தாபாக்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலை கேண்டீன்கள் மற்றும் பால் உள்ளிட்ட உணவு பதப்படுத்தும் யூனிட்கள் போன்றவை இதில் அடங்கும்.
இந்த சலுகையைப் பெற சில கட்டாய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து வர்த்தக மற்றும் தொழிற்துறை எல்பிஜி பயனாளர்களும் எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்களில் பதிவு செய்ய வேண்டும். பிஎன்ஜி இணைப்புக்கு விண்ணப்பிப்பதும் கட்டாயம் என கூறப்படுகிறது.
Next Story
