Begin typing your search above and press return to search.
தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு!! வெளியான முக்கிய தகவல்கள்!!

By : Bharathi Latha
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏப்ரல் 1, 2026 முதல் தமிழ்நாட்டில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஆண்டு சந்தா கட்டணம் ரூ.3,000 இல் இருந்து ரூ.3,075 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை செலுத்தினால் ஓராண்டு காலத்திற்குள் அல்லது 200 முறை சுங்கச்சாவடிகளை கடக்கலாம்.
வழக்கமான பயண கட்டணமும் 5-7% உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 77 சுங்கசாவடிகளில் 60-66 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. செங்கல்பட்டு, விக்கிரவாண்டி, ஆத்தூர் போன்ற முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இது அமலுக்கு வரும்.
மார்ச் 31க்குள் பழைய விலையில் (ரூ.3,000) புதுப்பித்துக் கொள்ளலாம். FASTag கணக்கில் KYC விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்யுங்கள். NHAI வலைதளம் அல்லது ராஜ்மார்க் யாத்ரா ஆப் மூலம் ஆண்டு சந்தா பெறலாம்.
Next Story
