Kathir News
Begin typing your search above and press return to search.

ரயில்கள் மீது கல்வீசுவது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை!!

ரயில்கள் மீது கல்வீசுவது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 March 2026 4:39 PM IST

சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரயில்கள் மீது கல்வீசும் சம்பவங்கள் அதிகம் நடப்பதால், பயணிகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓடும் ரயிலின் மீது வீசப்படும் கற்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே இருக்கும் பயணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பெரிய காயங்களையும், நிரந்தர உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். இது ரயில்வே சட்டம், 1989-ன் கீழ் ரயில்கள் மீது கல்வீசுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.


இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். ரயில் தண்டவாளங்களுக்கு அருகே சந்தேகத்துக்கிடமான செயல்கள் ஏதேனும் நடந்தால், பொதுமக்கள், பயணிகள் உடனடியாக ரயில்வே உதவி எண் 139-க் குத் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News