Begin typing your search above and press return to search.
ட்ரம்ப்-மோடி உரையாடல்!! மேற்காசியா மோதல் குறித்து விவாதம்!!

By : Bharathi Latha
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார். மேற்காசியாவில் நிகழும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த உரையாடலில் கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க் இணைந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. எனினும், எலான் மஸ்க் என்ன பேசினார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், அதிபர் ட்ரம்ப்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
Next Story
