மேற்கு வங்க தேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான குற்றப்பத்திரிகை வெளியிட்ட அமித் ஷா!!

By : Bharathi Latha
அடுத்த மாதம் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற போகும் நிலையில், முதல் கட்ட தேர்தல் 152 தொகுதிகளிலும், 2-ம் கட்ட தேர்தல் 142 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்நிலையில், கொல்கத்தாவுக்கு வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
அப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கடந்த 15 ஆண்டு ஆட்சிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை வெளியிட்டார். மேலும் மம்தா பானர்ஜி கடந்த 15 ஆண்டுகளாக பொய், வன்முறை, ஊழல் அரசியலை வளர்த்தார் என்றார். ஆனால் தற்போது வரும் தேர்தலில் மேற்கு வங்க மக்கள் அச்சம் மற்றும் நம்பிக்கை ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என கூறினார்.
மேற்கு வங்கத்தில் ஊடுருவல் பிரச்சனை, ஒழுங்கின்மை, அராஜகம், பொருளாதார வீழ்ச்சி குறித்து எடுத்துரைத்தார். திரிணமூல் கட்சி மேற்கு வங்கத்தை குற்றவாளிகளின் கூடாரமாக மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார். பாஜக ஆட்சி அமைக்கும் என நம்புவதாக கூறினார்.
