Begin typing your search above and press return to search.
மேற்காசிய மோதல்!! பிரதமர் மோடியின் வேண்டுகோள்!!

By : Bharathi Latha
மேற்காசிய மோதல் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு உதவிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.
இந்த மோதல் எரிசக்தி தேவைகளுக்கு சர்வதேச நெருக்கடியை உருவாக்கி உள்ளது. இந்தியா தனது சர்வதேச உறவுகள் மற்றும் வலிமையால் இந்த சவால்களை எதிர்கொள்ளும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை அரசியல்மயமாக்க வேண்டாம் என எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கின்றனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அரசாங்கம் வழங்கும் தகவல்களை நம்பி நடவடிக்கை எடுக்குமாறு நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சூழ்நிலையை வெல்வோம் என்றார்.
Next Story
