புதுச்சேரியை உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் செல்லும் - அமித் ஷா உறுதி!!

By : Bharathi Latha
புதுச்சேரியில் நேற்று மாலை பாஜக சார்பில் என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனூரில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது, புதுச்சேரியை உயர்ந்த இடத்துக்கு என்டிஏ அரசு எடுத்துச் செல்லும் என உறுதி அளித்தார்.
மேலும் காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி பின்னோக்கி தள்ளப்பட்டதாக குற்றம் சாட்டினார். என்டிஏ கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளதாகவும், ஆனால் இண்டியா கூட்டணியில் பதவிக்காக சண்டை போட்டுக் கொள்கின்றனர் என்றும் கூறினார்.
புதுச்சேரியில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து முன்னேறிய மாநிலமாக ஆக்க வேண்டும் என்றார். லிங்காரெட்டிபாளையம், அரியூர் சர்க்கரை ஆலையை தனியார் கூட்டமைப்பு மூலம் புனரமைத்து இயக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புதுச்சேரி பெரும் வளர்ச்சியை நோக்கி செல்ல, 5 ஆண்டு ஆட்சியின் வெற்றி தொடர என்டிஏக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கூறினார்.
