Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க‌.விற்க்கு ஆப்படித்த பிரசாந்த் கிஷோர் - முடிவு என்னவாக இருக்குமோ?

தி.மு.க‌.விற்க்கு ஆப்படித்த பிரசாந்த் கிஷோர் - முடிவு என்னவாக இருக்குமோ?
X

ShivaBy : Shiva

  |  13 April 2021 7:52 AM IST

ஒரு‌ மாத பிரச்சார பரபரப்புக்குப் பின் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நல்லபடியாக நடந்து முடிந்து விட்டது. இப்போது அதன் முடிவு என்னவாக இருக்கும் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. பல கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் செய்தி சேனல்களும் தங்கள் பங்குக்கு கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு இந்த பரபரப்பை ஏற்றி விட்டுக் கொண்டு இருக்கின்றன.



தமிழக தேர்தலைப் பொறுத்தவரை பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக அலை வீசுகிறது என்றும் திமுக தான் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்து வருகின்றன. பத்திரிகையாளர்களும் கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் திமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு இவ்வாறு பேசுவதாக ஒரு பக்கம் விமர்சனம் எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

இதை நியாயப்படுத்தும் விதமாக தற்போது திமுகவின் அரசியல் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஐ-பேக் நிறுவனத்தின் பிரஷாந்த் கிஷோர் பேசியது அமைந்துள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் மேற்கு வங்காளத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியமைப்பது பற்றி பிரஷாந்த் கிஷோரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர், ஒரு கட்சியின் பலம், தலைமையின் திறன், எந்த அளவுக்கு வேலை செய்திருக்கிறார்கள் இவற்றைப் பொறுத்து மட்டுமே அதன் வெற்றி தோல்வி அமையும் என்றும் தங்கள் நிறுவனத்தால் எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் வெல்கிறார்கள் என்பதில் மட்டுமே உதவ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மேற்கு வங்கத்தில் பாஜக தான் வெற்றி பெறும் என்று கிளப் ஹவுஸ் உரையாடலில் பிரஷாந்த் கிஷோர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுகவைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கும் தனது நிறுவனத்துக்கும் கட்சி வெற்றி பெறுவதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் பேசியுள்ளது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவினர் மின்னணு வாக்குப் பெட்டியைப் பாதுகாக்கிறோம், ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு இருக்கு என்ற ரீதியில் ஓவர் கான்ஃபிடன்டாக பேசி வரும் நிலையில், பிரஷாந்த் கிஷோர் வெற்றி, தோல்வி தன் கையில் இல்லை என்று நழுவும் விதமாகப் பேசி இருப்பது கருத்துக்கணிப்புகள் பொய்யாகி தலைகீழான முடிவை மக்கள் தர இருக்கிறார்களோ என்ற விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News