Kathir News
Begin typing your search above and press return to search.

கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதா? ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதமன்றம் - கதறும் இடதுசாரிகள்!

கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதா? ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதமன்றம் - கதறும் இடதுசாரிகள்!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  13 April 2021 5:34 AM GMT

வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலை ஆக்கிரமித்து ஞான்வாபி மசூதி கட்டப்பட்டதா என்று ஆய்வு செய்ய நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இடதுசாரி ஆதரவாளர்கள் பலரும் ஏதோ‌ தங்கள் வீட்டை தொல்லியல் துறை தோண்டி ஆய்வு செய்வது போல் பதறி வருகின்றனர்.

குறிப்பாக தி இந்து நாளிதழின் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி தி ஹிந்து நாளிதழில் வெளியான தலையங்கத்தை பதிவிட்டு "நீண்ட காலத்துக்கு முன்பே சட்ட ரீதியாக புதைக்கப்பட்ட பிரச்சினையை மீண்டும் தோண்டி எடுப்பதை நீதிமன்றம் ஆதரிப்பது ஏமாற்றம் அளிக்கிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் மகள் சுஹாசினி ஹைதர் உள்ளிட்ட சிலர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இந்துக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1991ஆம் ஆண்டு முதன் முதலாக ஞான்வாபி மசூதியில் வழிபாடு நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஞான்வாபி மசூதி இருக்கும் இடத்தில் 2050 ஆண்டுகளுக்கு முன்பு விக்ரமாதித்ய மகாராஜா காசி விஸ்வநாதர் கோவிலைக் கட்டினார் என்றும் 1664ல் முகலாய மன்னன் ஔரங்கசீப் கோவிலை இடித்து விட்டு கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கோவிலின் இடிபாடுகளை பயன்படுத்தி மசூதி கட்டியதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

எனவே மசூதியை நீக்கி விட்டு கோவிலுக்கு சொந்தமான சொத்தை மீண்டும் கோவில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது. 1991ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் இந்த குறிப்பிட்ட வழக்குக்கு பொருந்தாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஞான்வாபி மசூதியின் ஒரு பகுதி பழைய கோவிலின் கட்டிடம். இதை இன்றும் கண்கூடாகப் பார்க்க முடியும்.

மீண்டும் 2019ஆம் ஆண்டு வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் ஞான்வாபி மசூதி இருக்கும் இடத்தில் தொல்லியல் ஆய்வு நடத்தி அங்கு முன்னர் ஏதேனும் கட்டிடம் இருந்ததா, அது குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்ததா, அதில் பயன்படுத்தப்பட்ட கட்டிடப் பொருட்கள், கலை வேலைப்பாடுகள் என்ன மாதிரியானவை என்பதை கண்டுபிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், இந்துக்களிடம் கோவில் சொத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் தொல்லியல் துறையை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

கண்கூடாக கோவில் இருப்பது தெரியும் நிலையில் கூட இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை தட்டிக் கேட்கக் கூடாது என்றும், வரலாற்றுப் பிழைகளை சரி செய்யக் கூடாது என்றும் இடதுசாரிகள் பேசுவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News