Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு.. 10 பக்தர்கள் உயிரிழப்பு..

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு.. 10 பக்தர்கள் உயிரிழப்பு..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Jun 2024 4:26 PM GMT

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத் தாக்கில் கவிழ்ந்தது. காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத சம்பவங்கள் என்பது தொடர்கதையாகவே இருந்து வந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமை ஏற்ற பிறகு காஷ்மீருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 ஆர்டிகளை தடை செய்த பிறகு காஷ்மீர் மற்ற மாநிலங்களைப் போல காணப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்ய முடியாத பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் செய்தது.


இதற்கிடையே இப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி என்ற பகுதியில் பயங்கரவாத சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்குப் பேருந்து ஒன்று பக்தர்களை ஏற்றிச் சென்று கொண்டு இருந்துள்ளது. அதை நோக்கி அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த எதிர்பாராத தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகே இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. அந்த பேருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு ஷிவ்கோடி குகைக் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த பயங்கரவாத சம்பவம் நடந்துள்ளது.

இதற்கு இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் இது பற்றி கூறும் பொழுது, "ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது வேதனை அளிக்கிறது. இந்த கொடூரமான செயல் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும், இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தேசம் நிற்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். இதனிடையே பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் குறித்து துணை நிலை கவர்னர் மனோஜ் சிங்ஹாவை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதலால் ஏற்பட்டுள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு கூறியுள்ளார். மேலும் இத்தகைய தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News