புழுங்கல் அரிசிக்கு 10 சதவீதம் வரி குறைப்பு, அரிசிக்கு ஏற்றுமதிவரி ரத்து- மத்திய அரசு நடவடிக்கை!
பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளுக்கு ஏற்றுமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதே போல புழுங்கல் அரிசிக்கான ஏற்றுமதி வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
By : Karthiga
ஏற்றுமதியை அதிகரிக்கவும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் வசதியாக அரிசி ஏற்றுமதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கி வருகிறது. அந்த வகையில் பாஸ்மதி அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு ரத்து செய்தது .இதைத் தொடர்ந்து பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளுக்கும் கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளது.
அதன்படி பாஸ்மதி அல்லாத பச்சரிசி வகைகளுக்கு ஏற்றுமதிவரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது .இதைப்போல புழுங்கல் அரிசி நெல் போன்றவற்றுக்கான ஏற்றுமதி வரியை 10 சதவீதமாக குறைத்துள்ளது. முன்னதாக பாசுமதி அல்லாத பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி போன்றவற்றுக்கு 20 சதவீத ஏற்றுமதிவரி விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த வரி குறைப்பு நடவடிக்கைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது .இந்த தகவல்களை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் வருவாய் துறை செய்தி குறிப்பு ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.