இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான பூங்காக்கள்:இதுவரை 10 நெகிழிப் பூங்காக்களுக்கு ஒப்புதல்!

புதிய பெட்ரோலிய ரசாயனத் திட்டம் என்ற பெருந் திட்டத்தின்கீழ் நெகிழிப் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய ரசாயனம் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.அதி நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் தேவையின் அடிப்படையில் நெகிழிப் பூங்காக்கள் அமைக்கப்படும்
உள்நாட்டு நெகிழிப் பொருட்களின் மறு சுழற்சித் திறன்களை வலுப்படுத்தும் வகையில் இவை அமைக்கப்படுகின்றன இத்துறையில் முதலீடு உற்பத்தி,ஏற்றுமதி ஆகியவற்றை அதிகரிக்கவும் வேலைவாய்ப்பை உருவாக்கவும் உதவிடும் வகையில் நெகிழிப் பொருட்களை பதனப்படுத்தும் தொழில்துறையின் திறன்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.40 கோடி வரை, திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் அளவிற்கு மானியமாக மத்திய அரசு வழங்குகிறது
பிளாஸ்டிக் பூங்கா என்பது நெகிழிப் பொருட்கள் தொடர்பான வர்த்தகங்கள், தொழில்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்துறை மண்டலமாகும். பிளாஸ்டிக் பதனப்படுத்தும் தொழிலின் திறன்களை ஒருங்கிணைத்தல், முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவற்றை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது இந்தப் பூங்காக்கள் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி முயற்சிகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான வளர்ச்சியை அடைவதில் கவனம் செலுத்துகின்றன
பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகித்தல் மறுசுழற்சியை ஊக்குவித்தல் மற்றும் ரசாயன தொழிலுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றிற்கான இந்தியாவின் உத்திசார் திட்டமாக இந்தப் பிளாஸ்டிக் பூங்காக்கள் உருவெடுத்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் இதுவரை 10 நெகிழிப் பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது