யமுனை நதியில் இருந்து 10 நாட்களில் 1,300 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்:வாக்குறுதியை நிறைவேற்றும் பாஜக!

By : Sushmitha
டெல்லியின் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைச்சர் பர்வேஷ் வர்மா யமுனை நதியில் படகு ஆய்வு மேற்கொண்டார் நதியை சுத்தம் செய்து மீட்டெடுப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்து கடந்த 10 நாட்களில் 1,300 மெட்ரிக் டன் கழிவுகளை அகற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்
இந்த முயற்சி சமீபத்திய டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக அளித்த முக்கிய பிரச்சார வாக்குறுதியான யமுனா நதியை மீட்டெடுப்பதை மையமாக கொண்டு செயல்படுகிறதாக பார்க்கப்படுகிறது அதுமட்டுமின்றி நீண்டகால மேம்பாடுகளை எளிதாக்குவதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதோடு ஆற்றுப் படுகை மறுசீரமைப்பும் நடைபெற்று வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார்
வடிகால் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
தூய்மைப்படுத்தும் இலக்கின் ஒரு முக்கிய அங்கமாக தொழிற்சாலை மற்றும் வீட்டுக் கழிவுகளை ஆற்றில் வெளியேற்றும் 18 முக்கிய வடிகால்களுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவது அடங்கும் மேலும் புதிய கழிவுநீர் குழாய்கள் கட்டப்பட்டு ஏற்கனவே உள்ளவை மேம்படுத்தப்படும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறுவல் செயல்முறை நிறைவடையும் என்றும் கழிவுநீர் வெளியேற்றம் தொடர்பான புகார்கள் முறையாக தீர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
யமுனா நதிக்காக வேலை செய்ய வேண்டும் என்று முந்தைய அரசுக்கு ஒருபோதும் தோன்றியதில்லை ஆனால் இப்போது டெல்லி அரசு மட்டுமல்ல பிரதமர் அலுவலகமும் இதில் ஈடுபட்டுள்ளது என்று அமைச்சர் வலியுறுத்தினார்
