Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் திவ்யாஷா மையத்தின் மூலம் சுமார் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார் மத்திய இணை அமைச்சர்!

பிரதமரின் திவ்யாஷா மையத்தின் மூலம் சுமார் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார் மத்திய இணை அமைச்சர்!
X

SushmithaBy : Sushmitha

  |  7 July 2025 9:22 PM IST

சென்னை கே கே நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று 07 ஜூலை 2025 நடைபெற்ற பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் நலமான பாரதம் வளமான பாரதம் எனும் நல்வாழ்வு மருத்துவ பரிசோதனை முகாமை அமைச்சர் தொடங்கிவைத்து மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார்


பின்னர் இஎஸ்ஐசி மருத்துவமனையில் பிரதமரின் திவ்யாஷா மையத்தின் மூலம் சுமார் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை அமைச்சர் வழங்கினார் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாறும் பாதையில் பொருளாதார வளர்ச்சியில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது இத்துடன் நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதையும் மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் உறுதிசெய்துள்ளது என்று கூறியுள்ளார்


அண்மையில் திருப்பூரில் ஒரு இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்த அமைச்சர் விரைவில் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு மருத்துவமனை தொடங்கப்படும் என்றார் மருத்துவத்துறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை நாடு அடைந்துள்ளதுபற்றி குறிப்பிட்ட அமைச்சர் கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் 20 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை தொடங்கியிருப்பதாகவும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டுடன் அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதிசெய்துள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News