காப்பீட்டு நிறுவனங்களில் 100% அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு: மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!

By : Bharathi Latha
காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயர்த்துவது, வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், 'தொழில்நுட்ப மேம் பாடு, கணினிமயமாக்கல் உள் ளிட்ட நடவடிக்கைகள் காப்பீடு நடைமுறைகள், உரிமை கோரல் களுக்கான கால விரயத்தையும், செலவினத்தையும் குறைக்க உத வுவதோடு, காப்பீட்டு துறையின் ஒட்டுமொத்த திறனையும் மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத் தில் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்த நிர் மலா சீதாராமன், இந்திய காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு வரம்பு 74 சதவீதத்திலி ருந்து 100 சதவீதமாக உயர்த்தப்ப டும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிர்மலா சீதாரமன் பதிலளித்துப் பேசிய போது, காப்பீட்டு நிறுவனங்களில் அந் நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயர்த்துவது,காப் பீடு துறையில் அதிக நிறுவனங் கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் என்பதோடு வேலைவாய்ப் பையும் உருவாக்கும். அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்துவதால் காப்பீடு தாரர்கள் அச்சப்படத் தேவை இல்லை.
