Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டம்: நடப்பு நிதியாண்டில் ரூ.44,000 கோடி வழங்கிய மத்திய அரசு!

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டம்: நடப்பு நிதியாண்டில் ரூ.44,000 கோடி வழங்கிய மத்திய அரசு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 July 2025 8:29 PM IST

கடந்த மூன்று நிதியாண்டுகளில் தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மனித-வேலைநாட்களுக்கான விவரங்கள் கீழே தரப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு நிதி வழங்குவது என்பது தொடர் நடைமுறையாகும்.


2024-25 நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்கு தொடங்கப்பட்டதில் இருந்து அதுவரை இல்லாத அளவில் ரூ.86,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2025-26 நிதியாண்டிற்கும்கூட அரசு ஊரக வேலைவாய்ப்பிற்கு உதவும் வகையில் அதேயளவு தொகையை அதாவது ரூ.86,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை (18-7-2025) ரூ.44,000 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் (கிராமியம்) தமிழ்நாட்டிற்கு திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து (2016-17) ரூ.5376.66 கோடி வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் (2025-26) தமிழ்நாட்டிற்கு ரூ.1047.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஊரக மேம்பாட்டு இணையமைச்சர் திரு.கம்லேஷ் பஸ்வான் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த ஒரு பதிலில் தெரிவித்து உள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News