"என் கனவு நமது கோவை" - 100 வாக்குறுதி 500 நாட்களில்...கோவைக்கான வாக்குறுதியை வெளியிட்டார் அண்ணாமலை!

By : Sushmitha
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கோவை முழுவதும் தனது தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப் படுத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று கோவை மக்களுக்கான தனது வாக்குறுதியாக 100 வாக்குறுதிகளை அண்ணாமலை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலையின் வாக்குறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ள 100 வாக்குறுதிகளும் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை கூறியுள்ளார், மேலும் என் கனவு நமது கோவை என்ற தலைப்பில் அவற்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு மக்கள் குறைதீர்ப்பு மையமாக செயல்படும்.
கோவை விமான நிலையம் உலக தரத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு சர்வதேச முனையமாக மாற்றப்படும்.
மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
தமிழகத்தின் இரண்டாவது மேலாண்மை கல்வி ஐஐஎம் கோவையில் அமைக்கப்படும்.
ஆனைமலை ஆறு நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்.
நொய்யல் கௌசிகா நதிகள் மீட்டெடுக்கப்பட்டு அவற்றின் நீர் வளம் மேம்படுத்தப்படும்.
விசைத்தறி உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் பவர் டெக்ஸ் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
என் ஐ ஏ மற்றும் என்சிபி ஆகியவற்றின் கீழே அலுவலகங்கள் கோவையில் அமைக்கப்படும்.
டிபன்ஸ் காரிடாரில் செமி கண்டக்டர்கள் உற்பத்திக்கு பாதுகாப்பு அமைச்சகட்டிடம் வலியுறுத்தப்படும்.
கோவையில் நான்கு நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும்.
ஒன்றரை வருடங்களுக்குள் 250 மோடி மருந்தகங்களை அமைப்போம்.
கர்மவீரர் காமராஜர் அவர்கள் நினைவாக அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு கோவையில் மூன்று உணவு வங்கியை அமைப்போம் என 100 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
Source : Dinamalar
