பசுமை மைல்கல்:100 GW நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி திறனைக் கடந்த இந்தியா!

ஒரு பெரிய வளர்ச்சியில் இந்தியா 100 ஜிகாவாட் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி திறனைக் கடந்து ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது 2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி திறன் என்ற இந்தியாவின் லட்சிய இலக்கை அடைவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முதல்படியை வென்றுள்ளது
இந்த வளர்ச்சிக்கு பதிலளித்த மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் பிரகலாத் ஜோஷி பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் எரிசக்தி பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாகவும் ஊக்கமளிப்பதாகவும் உள்ளது சூரிய மின் தகடுகள் சூரிய பூங்காக்கள் மற்றும் கூரை சூரிய மின் திட்டங்கள் போன்ற முயற்சிகள் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன என்றார்
மேலும் இதன் விளைவாக இன்று இந்தியா 100 ஜிகாவாட் சூரிய ஆற்றல் உற்பத்தி இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது பசுமை எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெறுவது மட்டுமல்லாமல் உலகிற்கு ஒரு புதிய பாதையையும் காட்டுகிறது என்று கூறினார் பிரதமர் சூர்யாகர் முஃப்த் பிஜிலி யோஜனா வீட்டு கூரை சூரிய சக்தியை ஒரு யதார்த்தமாக மாற்றுகிறது என்றும் நிலையான ஆற்றலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான மின்சாரத்தை வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்
2024 ஆம் ஆண்டில் 4.59 GW நிறுவப்பட்டதன் மூலம் கூரை சூரிய சக்தித் துறையும் வளர்ந்தது இது பெரும்பாலும் PM சூர்யா கர்:முஃப்த் பிஜிலி யோஜனாவால் இயக்கப்படுகிறது இது 9 லட்சம் நிறுவல்களை நெருங்குகிறது
சூரிய சக்தி உற்பத்தியில் முன்னேற்றங்கள்
சூரிய சக்தி உற்பத்தியிலும் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது அதுமட்டுமின்றி இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி திறன் 2014 இல் 2 GW ஆக இருந்தது இது 2024 இல் 60 GW ஐ எட்டியது 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த திறனை 100 GW ஆக விரிவுபடுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது
2014 ஆம் ஆண்டில் நாட்டின் சூரிய மின் உற்பத்தி திறன் வெறும் 2 ஜிகாவாட் மட்டுமே இருந்தது கடந்த பத்தாண்டுகளில் இது 2024 ஆம் ஆண்டில் 60 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது இது இந்தியாவை சூரிய மின் உற்பத்தியில் உலகளாவிய தலைவராக நிலைநிறுத்தியுள்ளது தொடர்ச்சியான கொள்கை ஆதரவுடன் 2030 ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி திறனை அடையும் பாதையில் இந்தியா உள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது