Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் மக்கள் மருந்தக திட்டம்... ரூ.1000 கோடி விற்பனை இலக்கை எட்டி சாதனை...

பிரதமரின் மக்கள் மருந்தக திட்டம்... ரூ.1000 கோடி விற்பனை இலக்கை எட்டி சாதனை...
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 Dec 2023 1:57 AM GMT

பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டத்தின் 2023-24–ம் நிதியாண்டு விற்பனை ரூ.1000 கோடி இலக்கை எட்டியது. நாட்டின் 785-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்கள் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை வாங்கியதன் மூலம் சுமார் 25,000 கோடியை சேமித்த நாட்டு மக்களால் மட்டுமே இந்தச் சாதனை சாத்தியமானது. கடந்த 9 ஆண்டுகளில், 2014-ம் ஆண்டில் 80 ஆக இருந்த இந்த மருந்தகங்களின் எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளில் 100 மடங்கு அதிகரித்துள்ளது. இப்போது நாட்டின் ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சுமார் 10000 மருந்தகங்களாக வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் தனது சுதந்திர தின உரையின் போது, நாடு முழுவதும் 25,000 பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகங்களை திறக்கப்போவதாக அறிவித்தார்.


ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 10,000-ஆவது மக்கள் மருந்து மையத்தை பிரதமர் 2023 நவம்பர் 30 அன்று மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தார். மேலும் அதன் எண்ணிக்கையை 25,000 ஆக விரிவுபடுத்த வழிவகுத்தார். அதன்படி, 2026 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் 25,000 மக்கள் மருந்தகங்களை திறக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பி.எம்.பி.ஐ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், புதிய மக்கள் மருந்தகங்களை திறக்க, ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட செயல்படும் மக்கள் மருந்தக மையங்கள் உள்ளன. பி.எம்.பி.ஜே.பி.யின் தயாரிப்பு கூடையில் 1963 மருந்துகள் மற்றும் 293 அறுவை சிகிச்சை சாதனங்கள் உள்ளன. இதில் இருதய, புற்றுநோய் எதிர்ப்பு, அனிட்-நீரிழிவு, தொற்று எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு, இரைப்பை குடல் மருந்துகள், ஊட்டச்சத்து மருந்துகள் போன்றவை அடங்கும். குருகிராம், பெங்களூரு, சென்னை, கவுகாத்தி மற்றும் சூரத் ஆகிய இடங்களில் ஐந்து கிடங்குகள் உள்ளன.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News