காசி தமிழ் சங்கமம் 1,000 ஆண்டுகால ஒற்றுமையின் கொண்டாட்டம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி..
By : Bharathi Latha
காசி தமிழ் சங்கம் இரண்டாவது நிகழ்ச்சி தற்பொழுது வெகு சிறப்பாக வாரணாசியில் நடைபெற்ற வருகிறது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் அமைந்திருக்கும் வாரணாசியில் தற்பொழுது தமிழக மக்கள் பெரும்பாலானோர் சென்று காசி தமிழ் சங்கத்தின் இரண்டாவது பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்திற்கும் மற்றும் காசி வாரணாசிக்கும் இடையே இருக்கின்ற தொடர்புகளை வெளிக்கொண்டுவரும் விதமாகவும் கடந்த கால வரலாறுகளை நினைவுபடுத்தும் ஒரு அங்கமாகவும் காசி தமிழ் சங்க நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
வாரணாசி நகரில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி இன்று கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் காசி தமிழ் சங்கமம் விழா ஆயிரம் ஆண்டுகால ஒற்றுமையின் கொண்டாட்டம் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களுக்கும் காசிக்கும் இடையே உள்ள தொடர்பு பல்லாண்டு கால தொடர்பு என்றும் இது பாரதத்தின் வேற்றுமையில் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது என்றும் கூறினார்.
கடந்த காலங்களில் இந்தியாவை பல அரசர்கள் ஆட்சி செய்திருந்தாலும் அவர்கள் ஒரே குடும்பம் போல ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததாகவும் அந்த தொடர்பு பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த காசி தமிழ் சங்கமம் அதன் தொடர்ச்சி என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு, காசி தமிழ் சங்கமம் விழாவில் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு துறைகளை சேர்ந்த 1400 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
Input & Image courtesy:News