சொன்னதை செய்பவர் பிரதமர் மோடி.. இந்தியாவின் 10,000-ஆவது மக்கள் மருந்தகம் திறப்பு..
By : Bharathi Latha
தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 10,000-வது மக்கள் மருந்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நாட்டில் உள்ள மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000-லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த சந்தர்ப்பத்தில், பிரதமரின் வேளாண் மகளிர் ட்ரோன் மையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவும், தியோகரின் எய்ம்ஸில் இருந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அங்கு 10,000-வது மக்கள் மருந்தகம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. டாக்டர் மன்சுக் மாண்டவியாவும், பயனாளிகளுடன் கலந்து உரையாடினார். டாக்டர் மாண்டவியா தியோகரில் உள்ள ராமால்டிஹ் கிராமத்திற்கும் சென்று வயலில் ட்ரோன் மூலம் இப்கோவின் நானோ யூரியா தெளிக்கப்படுவதை பார்வையிட்டார். சுகாதாரத்தை மலிவு விலையிலும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவது ஆரோக்கியமான இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடித்தளமாகும். மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க மக்கள் மருந்தகங்களை நிறுவியது இந்த திசையில் ஒரு முக்கிய முன் முயற்சியாகும்.
இப்போது நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 10000 மக்கள் மருந்தகங்களாக அதிகரித்துள்ளது. பிரதமர் தனது சுதந்திர தின உரையில், நாடு முழுவதும் 25,000 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தார். இப்போது, இந்த வசதியை அதிகரிக்கவும், இந்தியா முழுவதும் சென்றடையவும், 25,000 மக்கள் மருந்தகங்களை 2026 மார்ச் 31 க்குள் நாடு முழுவதும் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News