Kathir News
Begin typing your search above and press return to search.

தென்னை விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தும் தமிழக அரசு.. மரம் ஒன்றிற்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!

தென்னை விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தும் தமிழக அரசு.. மரம் ஒன்றிற்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!

SushmithaBy : Sushmitha

  |  3 May 2024 1:27 PM GMT

கோடிக்கணக்கான தென்னை மரங்கள் வறட்சியால் கருகி வருகிறது அதனால் விவசாயிகளை துயரிலிருந்து நீக்க தென்னை மரம் ஒன்றிற்கு தலா பத்தாயிரம் வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் அவர், எந்த வருடமும் இல்லாமல் தற்போது தமிழகத்தை வாட்டி வடக்கும் வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக கோவை மற்றும் திருப்பூரில் 2.5 கோடி தென்னை மரங்கள் கருகி உள்ளது. இதனால் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் செலவழித்த தென்னை மரங்களை காப்பாற்ற முடியாமல் துயரில் உள்ளனர்.

விவசாயிகளின் துயரைத் துடைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கும் மேற்கொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது! வறட்சியால் பாசன ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு விட்டதோடு நிலத்தடி நீர்மட்டமும் அகல பாதாளத்திற்கு சென்று விட்டது இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து தென்னை மரங்களுக்கு கொங்கு மண்டல விவசாயிகள் நீர் பாய்ச்சி வருகின்றனர். இதனால் சுமார் ஆயிரம் தென்னை மரங்களை வைத்துள்ள விவசாயிக்கு ஒரு மாதத்திற்கு ரூபாய் 4.5 லட்சம் முதல் 6 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் பல விவசாயிகளாலும் தனது தென்னை மரத்தை காப்பாற்ற முடியவில்லை.

எனவே விவசாயிகளை கடன் சுமையில் ஆழ்த்தாமல் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிற்கு ரூபாய் பத்தாயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தி அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News