தொடங்கியது மின்சார இயக்கத்தை அதிகரிக்க 10,900 கோடி ரூபாய் மதிப்பில் PM E-DRIVE திட்டம்: சொல்லி அடிக்கும் மோடி அரசு!
By : Sushmitha
மின்சார வாகனங்கள் வாங்கும் செயல்முறையை எளிதாக்கவும் மின்சார ஆம்புலன்ஸ்கள் மற்றும் மற்ற மின்சார வாகனங்களை ஊக்குவிக்க ரூபாய் 10,900 கோடி செலவில் புதுமையான வாகன மேம்பாட்டு திட்டத்தில் PM E - Drive திட்டத்தில் PM Electric Drive Revolution திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் 11ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தில் புதிதாக இ-வவுச்சர்கள் வாங்கும் வசதியும் உள்ளது.
மேலும் பழைய டிரக்கை அகற்றி அதற்கு பதிலாக மின் லாரியை வாங்குவதற்கு கூடுதல் ஊக்கத் தொகையும் வழங்குவதையும், சோதனை முகமைகளை மேம்படுத்துவதற்காக ரூ.780 கோடி அர்ப்பணிப்பு நிதியுடன் வாகன சோதனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி இருசக்கர, மூன்று சக்கர மற்றும் மின் ஆம்புலன்ஸ்கள், மின் லாரிகளை ஊக்குவிக்கவும் பிற மின்சார வாகனங்களை ஊக்குவிக்கவும் ரூ. 3,679 கோடி மதிப்புள்ள மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு இந்தத் திட்டம் 24.79 லட்சம் மின் இருசக்கர வாகனங்கள், 3.16 லட்சம் மின் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 14,028 இ-பஸ்களுக்கு ஆதரவளிக்கும். இ-ஆம்புலன்ஸின் சேவைக்காக ரூபாய் 500 கோடி இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அக்டோபர் 1 இல் மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை அமைச்சர் குமாரசாமி ஃப்ஏஎம்இ (FAME) திட்டம் மற்றும் மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டத்திலிருந்து பிஎம் இ-டிரைவ் திட்டத்தின் ஒரு பகுதியை தொடங்கி வைத்தார். மேலும் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடியின் தெளிவான அழைப்பின்படி ஸ்வச் பாரத் மட்டும் இன்றி ஸ்வச் வாகன்க்கும் பங்களிக்கிறோம். அதன்படி நூறு நாட்களுக்குள் இந்த திட்டத்தை தொடங்கவும் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதியை தற்பொழுது நிறைவேற்ற உள்ளோம் என்று கூறினார்.
இவரைத் தொடர்ந்து, பிரதமரின் இ- டிரைவ் திட்டம் மின்சார வாகனங்கள் தத்தெடுப்பதை விரிவுபடுத்துவதிலும், நாடு முழுவதும் முக்கியமான சார்ஜிங் உள் கட்டமைப்பை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கும். இது தூய்மையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்கும் என்று கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை இணை அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா கூறியுள்ளார்.
அதுமட்டும்இன்றி கனரக தொழில்துறை அமைச்சகம், இ-வவுச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஒன்பது முக்கிய நகரங்களில் CESL வழியாக 14,028 இ-பஸ்களை வாங்குவதற்கு ரூ.4,391 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.500 கோடி இ-டிரக்குகளை ஊக்குவிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 22,100 ஃபாஸ்ட் சார்ஜர்களை நிறுவுவதற்கு ரூ.2,000 கோடி செலவிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய மின்சார வாகனங்களில் தொழில்நுட்பங்களைக் கையாளுவதற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு ரூ.780 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.