Kathir News
Begin typing your search above and press return to search.

நேரு , இந்திரா காந்திக்கு பிறகு டெல்லியில் 11-வது முறையாக சுதந்திர தின உரையாற்ற இருக்கும் பிரதமர் என்ற பெருமை பெற்ற மோடி!

நேரு இந்திரா காந்திக்கு பிறகு 11 வது முறையாக செங்கோட்டையில் சுதந்திர தின உரை ஆற்ற இருக்கிறார் பிரதமர் மோடி.

நேரு , இந்திரா காந்திக்கு பிறகு டெல்லியில் 11-வது முறையாக சுதந்திர தின உரையாற்ற இருக்கும் பிரதமர் என்ற பெருமை பெற்ற மோடி!
X

KarthigaBy : Karthiga

  |  13 Aug 2024 5:15 PM GMT

சமீபத்திய மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் ஆகியுள்ளார். இதன் மூலம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். மோடி தற்போது நேரு மற்றும் அவரது மகள் இந்திரா காந்திக்கு பிறகு செங்கோட்டை கொத்தளத்திலிருந்து 11-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்றும் பிரதமர் என்ற பெருமையை வரும் 15-ஆம் தேதி பெற உள்ளார். முன்னாள் பிரதமர் நேரு 17 வரை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.

இந்திரா காந்தி 1966 ஜனவரி முதல் 1977 மார்ச் வரையிலும் பிறகு 1980 ஜனவரி முதல் 1984 அக்டோபர் வரையிலும் பிரதமராக இருந்துள்ளார். இவர் பதினாறு முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார். இதில் 11 முறை தொடர்ச்சியாக உரையாற்றியுள்ளார். பிரதமர் மோடி கடந்த ஆண்டு பத்து முறை சுதந்திர தின உரையாற்றிய மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்தார். பிரதமர் மோடி சுதந்திர தின முதல் உரையைக் கடந்த 2014 இல் ஆற்றினார். அப்போது தூய்மை இந்தியா திட்டம் , ஜன்தன் வங்கி கணக்கு போன்ற புதிய திட்டங்களை அறிவித்தார் .அப்போது முதல் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் வெளியிட்டு வருகிறார்.

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சராசரி நேரம் 82 நிமிடங்களாகும். இது மற்ற பிரதமர்களை காட்டிலும் அதிகமாகும். முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜரால் இதற்கு சற்று நெருக்கமாக உரையாற்றியுள்ளார் . 1997இல் குஜராலின் ஒரே ஒரு சுதந்திர தின உரை 71 நிமிடங்கள் நீடித்தது. பிரதமர் மோடியின் உரைகள் 2017 இல் மிக குறுகிய நேரமான 55 நிமிடங்களில் இருந்தது. 2016ல் மிக நீண்ட நேரமான 94 நிமிடங்கள் வரை வேறுபடுகின்றன. அரசு ஆவணங்களின்படி சுதந்திர தின உரைகளின் சராசரி நேரம் காலப்போக்கில் அதிகரித்தது. 1947 இல் நேரு ஆற்றிய முதல் உரை 24 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. பிரதமர் மோடி பதவியேற்பதற்கு முன் 1972ல் இந்திரா காந்தி ஆற்றிய உரையே நீளமானது இது 54 நிமிடங்கள் நீடித்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News