பாகிஸ்தானுக்கு கூடுதலாக 11 நிபந்தனைகளை விதித்த சர்வதேச நாணய நிதியம்!

பாகிஸ்தானுக்கு நிதி வழங்கிய சர்வதேச நாணய நிதியம் புதிதாக 11 கூடுதல் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது அதாவது பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை தவிர்க்க கடந்த ஆண்டு 700 கோடி டாலர் கடனை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்திற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
அதன்படி முதல் தவணையாக 110 கோடி டாலர் ஏற்கனவே பாகிஸ்தானிற்கு விடுவிக்கப்பட்டது இதனை அடுத்து பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலிற்கு பிறகு இரண்டாவது தவணையாக பாகிஸ்தானுக்கு 8,670 கோடி ரூபாய் நிதி உதவியை ஐ.எம்.எஃப் அறிவித்தது இந்த அறிவிப்பிற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்
இந்த நிலையில் தற்பொழுது அடுத்த தவணையை விடுவிக்க பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கூடுதலாக 11 நிபந்தனைகளை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது