ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் 1.10 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு!
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.10 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கிராமப்புறங்களில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீருக்கான குழாய் இணைப்பை வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தின்படி கிராமங்களில் உள்ள வீடுகள் தோறும் இணைப்பு வழங்கப்பட்டு சுத்தமான மற்றும் சுகாதாரமான குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதன் மூலமாக ஒரு நபருக்கு சராசரியாக தினமும் 55 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. புதுச்சேரி தெலுங்கானா, குஜராத், பஞ்சாப், மிசோரம், கோவா,இமாச்சல பிரதேசம் உட்பட 11 மாநிலங்கள் ஜல்ஜீவன் திட்டத்தில் திட்டத்தில் நூறு சதவீத இலக்கை எட்டி விட்டன.
தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு ஒரு கோடியே 25,28,183 வீடுகளுக்கு குடிநீருக்கான குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதில் நேற்று வரையிலான நிலவரப்படி ஒரு கோடியே 10,71,560 வீடுகளுக்கு குடிநீருக்கான குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது 88.37 சதவீதமாக உள்ளது. இதேபோன்று தமிழகத்தில் 7,871 கிராமங்களுக்கு முழுவதுமாக குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 655 கிராமங்களுக்கு முழுவதுமாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது 83.66% ஆக இருக்கிறது .ஜல்ஜீவன் திட்டத்தில் நாடு முழுவதும் நேற்று வரையிலும் 15 கோடியே 32 லட்சத்து 4281 வீடுகளுக்கு குடிநீருக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.