Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சி சுங்கத்துறையினர் அதிரடி.. ரூ. 110 கோடி மதிப்புள்ள 100 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்..

திருச்சி சுங்கத்துறையினர் அதிரடி.. ரூ. 110 கோடி மதிப்புள்ள 100 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 March 2024 3:39 PM IST

திருச்சி சுங்கத்துறையினர் ரூ.110 கோடி மதிப்புள்ள 100 கிலோ ஹாஷிஷ் போதைப் பொருளையும், ரூ.1.05 கோடி மதிப்புள்ள 876 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் ஊராட்சிப் பகுதியில் ஒரு இறால் பண்ணையில் ஹாஷிஷ் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பெருமளவில் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.


இதையடுத்து திருச்சிராப்பள்ளி சுங்கத் தடுப்பு ஆணையரகத்தின் மத்திய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்றபோது அங்கு யாரும் இல்லாததால் பூட்டை உடைத்து முழுமையாக ஆய்வு செய்து சோதனையிட்டனர். அதில் 48 பைகளில் ஹாஷிஷ் மற்றும் கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.


கைப்பற்றப்பட்ட 100 கிலோ ஹாஷிஷ் போதைப் பொருளின் மதிப்பு ரூ.110 கோடி எனவும், 876 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ. 1.05 கோடி எனவும் தெரியவந்துள்ளது. போதைப் பொருட்கள் சட்டம் - 1985 மற்றும் சுங்கச் சட்டத்தின் கீழ் இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News