பிரதமரின் 119வது மனதின் குரல் நிகழ்ச்சி:ஒரு நாள் விஞ்ஞானி முயற்சியில் தீவிரமாக இறங்கிய மாணவர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி அன்று பேசிய 119 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் கடந்த மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்திய நூறாவது செயற்கைக்கோளின் சாதனையை எடுத்துக்கூறி கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன என தெரிவித்தார்
மேலும் இன்னும் சில நாட்களில் தேசிய அறிவியல் தினத்தை கொண்டாட உள்ளதை நினைவுகூர்ந்த பிரதமர் நமது குழந்தைகளுடைய இளைஞர்களுடைய அறிவியல் மீதான ஆர்வமும் நாட்டமும் மிகுந்த முக்கியமான விஷயமாகும் இது தொடர்பாக எங்களிடம் ஒரு கருத்து இருக்கிறது விஞ்ஞானிகளாக ஒரு நாள் அதாவது நீங்கள் ஒருநாள் பொழுதை ஒரு அறிவியலாராக வாழ்ந்து பார்க்க வேண்டும் உங்களுக்கு விருப்பமான எந்த நாளை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் அந்த நாளன்று நீங்கள் ஏதோ ஒரு ஆய்வுக்கூடம் அல்லது விண்வெளி மையம் போன்ற இடங்களுக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள் இதனால் அறிவியல் மீதான உங்களுடைய ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என்று பேசியிருந்தார்
பிரதமரின் இந்த உரை தற்போது மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்களை ஒருநாள் அறிவியலாராக மாற்றி உள்ளது அதாவது ஜெய்ப்பூரில் உள்ள அமிட்டி பல்கலைக்கழக மாணவர்கள் 2025 பிப்ரவரி 19 அன்று ஜெய்ப்பூர் தேசிய ஆயுர்வேத நிறுவனத்திற்கு சென்றனர் புதுமையான தொழில்நுட்பத்தில் மாணவர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்
இதேபோல் 2025 பிப்ரவரி 28 அன்று குடிவாடாவில் உள்ள டாக்டர்.குருராஜு அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் கீழ் குடிவாடா பிராந்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி ஆய்வகத்தை பார்வையிட்டனர் மேலும் ஹரியானாவில் உள்ள கேப்டன் ஜெய்லால் அகாடமிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஆயுஷ் ஆராய்ச்சியில் நுண்ணறிவு மற்றும் ஆழ்ந்த அனுபவத்திற்காக ஜஜ்ஜரில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பயணம் செய்துள்ளனர்