Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்...வாக்காளர் அடையாள அட்டை இல்லையா! 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தலாம்..!

புதிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்...வாக்காளர் அடையாள அட்டை இல்லையா! 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தலாம்..!

SushmithaBy : Sushmitha

  |  7 April 2024 1:23 PM GMT

18 வயதை பூர்த்தி அடைந்த அனைவரும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெற்று வருகின்றனர். மேலும் வாக்களிப்பது நாம் அனைவரின் ஜனநாயக கடமையாகும். அதன்படி வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பவர்களின் பூத் ஸ்லிப் வழங்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

அதாவது தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிப்பதற்காக 12 ஆவணங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவை, ஆதார் அட்டை, பான் கார்டு, ரேஷன் அட்டை, வங்கி அல்லது அஞ்சல் பாஸ்புக், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம், புகைப்படத்துடன் கூடிய மத்திய மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை, எம் பி, எம் எல் ஏ, எம் எல் சி அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, சமூக நீதித்துறையின் அங்கீகாரம் பெற்ற மாற்றுத் திறனாளி சான்றிதழ், மத்திய அரசின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தொழிலாளர் அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு.

மேலும் எந்த ஒரு வாக்காளரின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் கூடுதல் ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. அதாவது வாக்காளரின் வாக்காளர் அட்டையில் இடம்பெற்றுள்ள பெயரில் சிறு எழுத்துப் பிழைகள் இருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் வாக்காளர் அட்டையில் உள்ள புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Source : மாலை மலர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News