ஏப்ரல் 12 தமிழகம் வரும் அமித் ஷா...! பிரச்சார பயண லிஸ்டு மொத்தமும் ரெடி..

By : Sushmitha
தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை மாற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது உறுதியாகி வருகின்ற ஏப்ரல் 12ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 லோக்சபா தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை எடுத்து தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுக்க தொடங்கிவிட்டது.
அதன்படி பாஜக தரப்பில் பாஜகவின் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த இரண்டு தினங்களாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். மேலும் தற்பொழுது பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் இந்த நிலையில் கடந்த வாரத்திலேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த பயண திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவருமான அமித்ஷா நாளை மறுநாள் இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். ஏப்ரல் 12ஆம் தேதி மதிய அளவில் மதுரைக்கு வரும் அமித்ஷா சிவகங்கையில் அன்று மதியம் 4 மணி அளவில் நடைபெறும் வாகன பேரணியில் கலந்துகொண்டு பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் மதுரையில் ரோட் ஷோ மூலம் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து வாக்கு சேகரித்து பிறகு இரவு மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய உள்ளார். அதோடு கன்னியாகுமரி சென்று முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்தும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
Source : The Hindu Tamil thisai
